மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் வரை உரையாற்றினார். அவர் அதிகபட்சமாக 2020ஆம் ஆண்டில் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் வரை பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். அப்போது, நீண்ட நேரம் உரையாற்றிக் கொண்டிருப்பதை உணர்ந்த அவர், அதில் இரண்டு பக்கங்களை நீக்கி தனது உரையை முடித்துக் கொண்டார். ஆனால், அதில் ஒரு முறை கூட தமிழ்நாட்டிற்கு ஒரு அறிவிப்பும் இடம்பெறவில்லை.
அதேபோல், 2025-2026ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டிலும் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்தவித திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. பீகார் மாநிலத்திற்கு தான் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அங்கு இந்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ளதால், பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவது தொடர்பான எந்த அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
Read More : BIG BREAKING | மின்சார வாகனங்கள், செல்போன்களின் விலை குறைகிறது..!! நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு..!!