fbpx

வெள்ளி வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு..!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெஞ்சார்ந்த வாழ்த்து..!!

தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் மீண்டும் ஒருமுறை பெருமை தேடித் தந்துள்ளதாக வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில், வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ”பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதல் T63 பிரிவில் வெள்ளி வென்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் மீண்டும் ஒருமுறை பெருமை தேடித் தந்துள்ள நமது மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்!” என பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

தமிழ்நாட்டில் 1,000 பேர் டெங்குவால் பாதிப்பு..!! மக்களே கவனம்..!! எச்சரிக்கும் சுகாதாரத்துறை..!!

Mon Oct 23 , 2023
தமிழ்நாட்டில் ஒரே மாதத்தில் டெங்கு காய்ச்சலால் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பருவகால மாற்றத்தால் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ரூ.1,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நோய் […]

You May Like