ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய டி20 அணியில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்படாத நிலையில், சமூக வலைதளத்தில் தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின், ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கு இந்திய வீரர்கள் பயணிக்க உள்ளனர். இதற்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இந்த அணிக்கு இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் கேப்டனாக நியமனமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, துருவ் ஜுரெல், துஷார் தேஷ்பாண்டே, ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஸ்பின்னர்களாக ரவி பிஷ்னாய் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தான், தற்போது ரசிகர்களிடையே சில விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால், தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக பவுலிங் செய்த ஹர்சித் ராணா, 11 இன்னிங்ஸ்களில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதுகுறித்து ஹர்தித் ராணா தனது இன்ஸ்டாவில், எல்லாமே சரியான நேரத்தில் உன்னை தேடி வரும் என்று பதிவிட்டுள்ளார். அதேபோல், வருண் சக்கரவர்த்தி கடைசியாக 2021 டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடி இருந்தார். அதில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில், மீண்டும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த 2 வீரர்களின் பதிவுகளும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
Read More : BIG BREAKING | கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்..!! சபாநாயகர் அதிரடி உத்தரவு..!!