சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த இருவரை விமானத்திற்குள் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக சென்னையில் நகைப்பறிப்பு உள்ள சம்பவங்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. பைக், செல்போன் வாங்கவும், ஆடம்பட செலவுக்கும் தேவையான பணம் கிடைப்பதால், தற்போது சிறுவர்களும் கூட இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்தாலும், தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில், சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த இருவரை விமானத்திற்குள் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விமானத்தில் தப்ப முயன்ற வடமாநிலத்தைச் சேர்ந்த இருவரையும் விமானத்திற்குள் புகுந்து காவல்துறையினர் கைது செய்து வெளியே அழைத்து வந்தனர்.
விமான நிலைய அதிகாரிகளிடம் நடந்ததை எடுத்துக்கூறி, கொள்ளையர்களை தப்ப விடாமல் துரிதமாக செயல்பட்டு போலீசார் பிடித்துள்ளார். சைதாப்பேட்டை, வேளச்சேரி, நீலாங்கரை உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் காவல்நிலையத்தில் வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Read More : ஜாகீர் உசைன் கொலை வழக்கு..!! 4 வாரங்களில் அறிக்கை தர ஐஜி, ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு..!!