fbpx

தமிழ்நாடு அரசியல்..!! ஊழல் வழக்கில் இதுவரை தண்டிக்கப்பட்டு பதவியை பறிகொடுத்தவர்கள் யார் யார்..?

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் குற்ற வழக்குகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1991 முதல் 1996ஆம் ஆண்டு காலகட்டத்தில் முதன்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதா, தனது ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக 66.65 கோடி ரூபாய் சொத்துக்களை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதாவை குற்றவாளியாக அறிவித்து 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் காரணமாக அவர் தனது முதலமைச்சர் பதவியையும், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார்.

அதே கால கட்டத்தில் அதிமுக ஆட்சியின்போது ஊராட்சித்துறை அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. இவர், தகர கொட்டகை ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 25 ஆயிரம் ருபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அப்போது மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வந்த செல்வகணபதி, இந்த தண்டனையால் தனது பதவியை இழந்தார்.

ஜெயலலிதா, செல்வகணபதிக்கு அடுத்து பதவியை இழந்தவர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி. அதிமுக ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 1998ஆம் ஆண்டு தமிழக – கர்நாடகா மாநில எல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக புகார் செய்யப்பட்ட வழக்கில், பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை பாலகிருஷ்ண ரெட்டி இழந்தார்.

2006 – 2011 வரையிலான திமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், மேல்முறையீடு செய்வதற்காக தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதே போல், அதிமுக ஆட்சியின்போது சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திரா குமாரி, 15 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் அரசு நிதியை ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எம்.பி, எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், இந்திரா குமாரி, அவரது கணவர் உட்பட 3 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்த வழக்கின் தீர்ப்பில் முன்னாள் அமைச்சர் இந்திரா குமாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அதே காலகட்டத்தில் கல்வி அமைச்சராக பதவி வகித்த பொன்னுசாமி மீது வருமானத்திற்கு அதிகமாக 77.49 லட்சம் ரூபாய் சொத்து குவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை தனி நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி மற்றும் அவரது குடும்பத்தார் 4 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Chella

Next Post

”அறைஞ்சிருவேன்.. அவ்ளோ கோபம் வருது”..!! மணி - ரவீனா காதலுக்கு முற்றுப்புள்ளி..!! பரபரப்பு வீடியோ..!!

Thu Dec 21 , 2023
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் உள்ளே நுழையும் போதே காதல் புறாக்களாக எண்ட்ரி கொடுத்தவர்கள் தான் மணி – ரவீனா. இவர்கள் இருவரும் காதலிப்பது ஊருக்கே தெரிந்த விஷயம். ஆனால், அவர்கள் வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக சேர்ந்துகொண்டு கேம் விளையாடுவது கடும் விமர்சனத்துக்குள்ளானது. கடந்த வாரம் கமல்ஹாசனே ரவீனாவின் இந்த செயலை கண்டித்திருந்தார். அதன் எதிரொலியாக இந்த வார எவிக்‌ஷனிலும் ரவீனா சிக்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் […]

You May Like