fbpx

தாய்லாந்தில் தங்கப் பதக்கங்களை வாரிக்குவித்த தமிழக மாணவி..!! மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்மிண்டனில் சாதனை..!!

தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய – பசிபிக் காதுகேளாதோர் பேட்மிண்டனில், அனைத்து பிரிவுகளிலும் தங்கம் வென்று தமிழக மாணவி சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஜெர்லின் அனிகா, 6-வது ஆசிய – பசிபிக் காது கேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டியில் 6 பிரிவுகளிலும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த 14 முதல் 20 ஆம் தேதி வரை தாய்லாந்தில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டிகளில் ஜெர்லின் அனிகா இந்த சாதனையைப் படைத்துள்ளார். ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளின் இறுதிச் சுற்றில் ஜெர்லின் அனிகா தங்கப்பதக்கம் வென்றார்.

தாய்லாந்தில் தங்கப் பதக்கங்களை வாரிக்குவித்த தமிழக மாணவி..!! மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்மிண்டனில் சாதனை..!!

மேலும், இளையோர் மகளிர் பிரிவு, இளையோர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளின் இறுதிச்சுற்றுகளிலும் தங்கம் வென்றுள்ளார். இந்நிலையில் மொத்தமாய் பேட்மிண்டன் தொடரின் அனைத்து பிரிவுகளிலும் பங்கேற்ற மாணவி ஜெர்லின் அனிகா, அனைத்து பிரிவு போட்டிகளிலும் வென்று 6 தங்கப் பதக்கங்களை தமிழகத்திற்கு அள்ளி வந்துள்ளார்.

Chella

Next Post

சமந்தாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா?... வெளிநாட்டில் இருப்பது இதற்குத்தானா..!!

Wed Sep 21 , 2022
நடிகை சமந்தா பத்து வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். விஜய், சூர்யா போன்ற கோலிவுட் நடிகர்களுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இதேபோல தெலுங்கிலும் முன்னணி நடிகையாக பல ரசிகர்களை பெற்றுள்ளார். புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தாலும், ஊ சொல்றியா மாமா பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் ரசிகர்களை ஆட்டம் காண வைத்தது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து […]

You May Like