fbpx

தமிழக வெற்றிக் கழக மாநாடு..!! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்வு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் வெயிலின் தாக்கம், விபத்துகள் என சில உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்தது. பலர் மாநாட்டில் மயக்கமடைந்து விழுந்தனர்.

அந்த வகையில், சென்னை பாரிஸ் கார்னர் பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மாநாட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அடுத்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் சிக்கி திருச்சி தவெக நிர்வாகிகள் சீனிவாசன், விஜய்கலை என இருவர் உயிரிழந்தனர். மேலும், மாநாட்டில் மயக்கடமடைந்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த சார்லஸ் என்பவர் உயிரிழந்தார்.

செஞ்சியை சேர்ந்த வசந்தகுமார் என்பவரும் விபத்தில் உயிரிழந்தார். இவர்கள் 6 பேரின் உயிரிழப்பு குறித்தும் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தவெக மாநாடு முடிந்து சேலம் திரும்பும்போது, விபத்தில் சிக்கி லட்சுமி என்பவர் சேலம் அரசு மருத்துவமமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவரும் எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் தவெக மாநாட்டில் நேர்ந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

Read More : ”நீ மெல்ல மெல்ல சாகணும்”..!! ஆசையாக சாப்பிட்ட கணவருக்கு நேர்ந்த சோகம்..!! கள்ளக்காதலனுக்காக மனைவி செய்ததை பாருங்க..!!

English Summary

Death toll rises to 7 in Thaweka conference

Chella

Next Post

நீரிழிவு நோயாளிகளே!. இனி கால் இழப்பு கவலை வேண்டாம்!. தமிழக அரசின் புதிய திட்டம்!.

Tue Oct 29 , 2024
Attention diabetics! Arrangement to prevent leg losses! Podiatry Center in Government Hospitals! Tamil Nadu Government Ordinance! Diabetic patients

You May Like