fbpx

தமிழ்நாடு போக்குவரத்துத்துறை..!! ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஒப்புதல் அளிக்கப்பட இடங்களில் சுமார் 1,484 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களும், போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் நிறுவனத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்களில் 222 ஓட்டுநர் பணியிடங்களும் காலியாக உள்ளன. தற்போது, 122 ஓட்டுநர் பணியிடங்களையும், 685 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களையும் நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் இணைய வழியில் மூலம் மட்டுமே பெறப்பட வேண்டும் என்றும் அரசு போக்குவரத்துக் கழகம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து தகுதியான நபர்களின் பட்டியலை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிக்கு கல்வித் தகுதி, வயது, சாதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உரிமம், ஓட்டுநர் தகுதித் திறன், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தகுதித் திறன் கொண்டவர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதவி செய்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

2023-24 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்கள் முன்கூட்டியே வெளியீடு...!

Thu Feb 16 , 2023
2023-24 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் படிவங்களை முன்கூட்டியே மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிக்கைகள் 2023 பிப்ரவரி 10 மற்றும் 14 ஆம் தேதிகளில் வெளியிடப்பட்டது. இவை 2023 ஏப்ரல் 1-லிருந்து நடைமுறைக்கு வரும். வரி செலுத்துவோருக்கு வசதியாக இருக்கும் வகையிலும் எளிதாக கணக்கு தாக்கல் செய்வதை மேம்படுத்தவும், புதிய படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெரிய மாற்றங்கள் எதுவும் […]

You May Like