நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும் பல்வேறு வேலை வாய்ப்பு செய்திகளை வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக வெளியிடப்பட்டிருக்கின்ற வேலைவாய்ப்பு செய்திகள் பற்றி, தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழக போக்குவரத்து துறையில் காலியாக இருக்கின்ற driver, contractor போன்ற காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக இந்த பணிகளுக்கு 685 காலி பணியிடம் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்களின் வயது 24 முதல், 40 வரையில் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் சேர விரும்பும் நபர்கள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதியானவர்களாக கருதப்படுவார்கள்.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு போக்குவரத்து துறையின் விதிமுறைகளின் படி, ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள், எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, சரியாக பூர்த்தி செய்து முறையான ஆவணங்களோடு, https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://tnsta.gov.in/&ved=2ahUKEwiG2d2a2rCBAxUXbGwGHUIAChYQFnoECBYQAQ&usg=AOvVaw1M9C-LC-kMtER864bpaJ14 என்ற இணையதளம் மூலமாக வரும் 18/9/2023 அன்று மாலைக்குள் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.