fbpx

‘தமிழ்நாடு மலையேற்ற திட்டம்’..!! ஆர்வம் இருப்பவர்கள் உடனே பதிவு பண்ணுங்க..!!

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பில் தற்போது மலையேற்ற விரும்பிகள் பயன்பெரும் வகையில், ‘தமிழ்நாடு மலையேற்றத் திட்டம்’ என்ற திட்டத்தையும், புதிய இணையதளத்தையும் வனத்துறை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார். மலையேற விரும்புவோர் TrekTamilnadu.com என்ற தளத்தில் பதிவு செய்து, உரிய அனுமதி மற்றும் முறையாக பயிற்சி பெற்ற பழங்குடியின மற்றும் மலைகிராமங்களில் உள்ள இளைஞர்கள் உதவியுடன் மலையேறலாம். இதற்கான முதற்கட்டமாக 300 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த இணையதளத்தில் பெயர், மொபைல் எண், இ-மெயில் முகவரி கொடுத்து உள்ளீடு செய்து கணக்கு துவங்க வேண்டும். பிறகு எளிதான மலையேற்ற பகுதிகள், சற்று கடினமான மலையேற்ற பகுதிகள், கடினமாக மலையேற்ற பகுதிகள் என 3 வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் தென்காசி தீர்த்தப்பாறை, நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, சேலம் போன்ற மாவட்டங்களில் உள்ள மலையேற்ற பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மலையேற்ற தூரம், அந்த பகுதிகள் கொண்டு கணக்கிட்டு ரூ.500 முதல் ரூ.5,000 வரையில் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நாம் எந்த பகுதியை தேர்வு செய்கிறோமோ, அந்த மலைப்பகுதியில் தூரம் என்ன..? கால அளவு, அங்கு நாம் பார்க்கும் வன விலங்குகள் என்னென்ன..? வழிகாட்டு நெறிமுறைகள் என எல்லாம் அதில் பதியப்பட்டிருக்கும். இதனை தெரிந்து கொண்டு நாம் செயல்படுத்த வேண்டும்.

Read More : கூகுளில் நீங்களும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டுமா..? இந்த ஈசியான டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!!

English Summary

Forest Minister Ponmudi launched the ‘Tamil Nadu Trekking Project’ and the new website.

Chella

Next Post

BP-யை கட்டுக்குள் வைக்கும் 2 பொருட்கள்..!! நீங்களே வீட்டில் செய்யலாம்..!!

Thu Oct 24 , 2024
High blood pressure (BP) is caused due to excessive anger, stress etc. Now let's see how to control this BP naturally without cost.

You May Like