நம்முடைய செய்தி நிறுவனத்தில் நாள்தோறும் பல்வேறு வேலை வாய்ப்பு செய்திகள் குறித்த விவரங்களை நாம் வெளியிட்டு வருகிறோம். அதேபோல இன்றும் பல்வேறு வேலை வாய்ப்பு தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி, இன்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகள் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த பல்கலைக்கழகத்தில், முதன்மை செயல் அலுவலர், ஆய்வக உதவியாளர் போன்ற பணியிடங்கள் தற்காலிக பணி அடிப்படையில், நிரப்பப்படுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
அதன்படி, Incubation Manager பணிக்கு, ஒரு காலி பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ஒன்றுக்கு, ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் சேர விரும்புபவர்கள், BSc and AH and MBA, MSc, BTech with MBA போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருப்பது மிகவும் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், இது தொடர்பாக இரண்டு வருட பணி முன் அனுபவம் பெற்று இருப்பது மிக, மிக முக்கியம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல laboratory assistant பணிக்கு, ஒரு காலி பணியிடம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் பணியில் சேர விரும்பும் நபர்கள் BSc, BTech in life sciences, biological science போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருப்பது மிகவும் அவசியம் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ஒன்றுக்கு, 20,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படலாம் என்று தெரிகிறது. அதேபோல இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள், நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் https://tanuvas.ac.in/admin/uploads/vacancies/1693489677.pdf என்ற அதிகாரப்பூர்வமான முகவரிக்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு The Project Coordinator, VIF @ TANUVAS and Director, Centre for Animal Health Studies, TANUVAS, Madhavaram Milk Colony, Chennai – 600 051 என்ற அதிகாரப்பூர்வமான முகவரிக்கு வரும் 29.9.2023 அன்று மாலைக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.