fbpx

இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம்..!! நடிகர் விஜய் பங்கேற்கிறாரா..?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த 2ஆம் தேதி விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதற்கிடையே, கட்சி பெயரில், ‘க்’ விடுபட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் பலரும் சுட்டிக்காட்டிய நிலையில், கட்சியின் பெயரில் ‘க்’ சேர்த்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் இன்று (19.02.2024, திங்கட்கிழமை) காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளது. நமது கழகத்தின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’தேசிய கட்சிகள் யாருடனும் இனி கூட்டணி இல்லை’..!! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி..!!

Mon Feb 19 , 2024
இனிமேல் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என பாஜக மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி உறுதியாக தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து சமீபத்தில் அதிமுக விலகிய நிலையில், மீண்டும் இரு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை அருகே நடந்த அதிமுக விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, […]

You May Like