தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்குத் தொண்டர்களும், பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். முக.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என பல்வேறு நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழத்தின் தலைவர் நடிகர் விஜய், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், ”மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பலரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
Read More : ADMK | இந்தியா கூட்டணியில் இணையும் அதிமுக..? எடப்பாடி பக்கம் சாயும் காங்கிரஸ்..? அதிர்ச்சியில் திமுக..!!