தமிழகத்தில் இன்றுமுதல் வரும் 3ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஆனால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மட்டும் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. தற்போது தமிழகத்தில் அ மதுரை விமான நிலையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40.4 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. தற்போது நகரில் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து மழைப்பொழிவு இருந்து வந்தாலும் கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து தான் காணப்படுகிறது.
மேலும், வரும் ஜூலை 3ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னுடன் கூடிய லேசான கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஜூலை 3 ம் தேதி வரை ஒரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்திருக்கிறது. அதனை தொடர்ந்து தென் தமிழக கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதி, இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் சூறாவளி காற்று 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.