fbpx

தமிழ்நாட்டில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!! இந்த 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில், நேற்றிரவு சென்னையில் நல்ல மழை பெய்த நிலையில் இன்றும் தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, நாகை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாநிலங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக சாலைகளில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்றும் சில இடங்களில் டிராபிக் அதிகமாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் வாகன ஓட்டிகள் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : EPFO… ரூ.50,000 உடனே உங்கள் வங்கியில் வந்து சேரும்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!

English Summary

Chennai Meteorological Department has informed that it will rain in 6 districts in Tamil Nadu today.

Chella

Next Post

உரிமைத்தொகை ரூ.1,000 கிடைக்காதவர்கள் ரெடியா இருங்க..!! இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கா..?

Mon Jul 8 , 2024
Special arrangements are being made for new applicants for the Artist Women's Scholarship Scheme.

You May Like