fbpx

தமிழ்நாட்டில் இன்று முதல் மழை வெளுத்து வாங்கப்போகுது..!! வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இன்று நள்ளிரவு விசாகப்பட்டினம் – கோபால்பூருக்கு இடையே கலிங்கப்பட்டணம் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கக் கூடும்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒரிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

அதேபோல், இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 30 – 40 கி.மீ. வேகத்தில் வலுவான தரைக்காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : ஆசியாவின் ‘கோடீஸ்வர தலைநகரமாக’ உருவெடுத்த மும்பை..!! இந்தியாவில் இத்தனை பணக்காரர்களா..?

English Summary

Tamil Nadu, Puducherry and Karaikal regions are likely to receive moderate rain for 7 days from today.

Chella

Next Post

கோவை டூ சென்னை..!! விமானத்தில் பறந்த அரசுப் பள்ளி மாணவர்கள்..!! ஆசையை நிறைவேற்றிய ஊராட்சி தலைவர்..!!

Sat Aug 31 , 2024
The students who traveled by plane from Coimbatore airport enjoyed it by taking a video.

You May Like