fbpx

Tax: 2024 பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தின் GST ரூ.9,713 கோடியாக அதிகரிப்பு…!

பிப்ரவரியில் சரக்கு மற்றும் சேவைவரி வருவாய் ரூ.1,68,337 கோடியாக அதிகரித்தது. 12.5 சதவீத ஆண்டு வளர்ச்சியை எட்டியுள்ளது.

பிப்ரவரி 2024-ல் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ.1,68,337 கோடியாக இருந்தது. இது 2023-ல் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 12.5 சதவீதம் அதிகமாகும். இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூ.31,785 கோடி ஆகும். மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூ.39,615 கோடியாக உள்ளது. ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு வசூலிக்கப்பட்ட ரூ. 38,593 கோடி உட்பட ரூ .84,098 கோடி ஆகும்.

மேலும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு வசூலிக்கப்பட்ட ரூ. 984 கோடி உட்பட ரூ. 12,839 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2024 பிப்ரவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ. 9,713 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடுகையில் 11 சதவீத வளர்ச்சியாகும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ. 8,774 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

Banana Stem: நீரிழிவு நோய் முதல் சிறுநீரக கல் வரை..! நோய்களை தீர்க்கும் வாழைத்தண்டு.? எப்படி பயன்படுத்தலாம்.!

Sat Mar 2 , 2024
Banana Stem: பொதுவாக வாழை மரத்தில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் உணவாகவும், மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது. வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய், வாழை இலை, வாழைப்பழம் என அனைத்துமே ஊட்டச்சத்து மிகுந்தவையாக இருக்கிறது. இதனை உணவாக எடுத்துக் கொள்ளும்போது நம் உடலில் பலவகையான நோய் தாக்கம் ஏற்படுவதை தடுக்கிறது. குறிப்பாக வாழை மரத்திலிருந்து கிடைக்கும் வாழைத்தண்டு பல வகையான நோய்களை குணப்படுத்துகிறது என்று மருத்துவர்களும் அறிவுறுத்திவுள்ளனர். அந்த வகையில் பெரும்பாலும் தென்னிந்தியா […]

You May Like