பெரியார் முகம் பொரித்த செங்கோலை வாங்க மறுத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா.
நாட்டின் புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவின் போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு, திருவாடுதுறை ஆதீனம் செங்கோல் வழங்கினார். தற்போது கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு சமூக நீதிக்கான தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைப்பு மதச்சார்பற்ற செங்கோல் ஒன்றையும் வழங்கியது.
மதுரையைச் சேர்ந்த மக்கள் சமூக நிதி பேரவை (மக்கள் சமூக நீதி வாரியம்) சனிக்கிழமை மாலை கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் பெரியார் சிலையுடன் கூடிய சமூக நீதி செங்கோலை வழங்கியது. சமூக நிதிய பேரவை தலைவர் மனோகரன், கணேசன் உட்பட 30க்கும் மேற்பட்டோர் முதல்வருக்கு தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை சமூக நீதியை காப்பாற்ற வேண்டும் எனக் கூறி வழங்கினர். ஆனால் முதலமைச்சர் சீதா ராமையா அதனை பெற மறுத்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.