fbpx

Lok Sabha தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழ்ப் புலிகள் கட்சி ஆதரவு..!! தலைவர் நாகை திருவள்ளுவன் அறிவிப்பு..!!

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக 40 தொகுதிகளிலும் தோ்தல் பணியாற்ற உள்ளதாக தமிழ்ப் புலிகள் கட்சி தலைவா் நாகை திருவள்ளுவன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டைமேட்டில், தமிழ்ப் புலிகள் கட்சியின் ‘மாநில உரிமைகள் மீட்பு மாநாடு’ ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் மாநாட்டிற்கு முன்னதாக கூறுகையில், ”மக்களவைத் தோ்தலில், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் வகையில், திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தோ்தல் பணியாற்ற இருக்கிறோம்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் அனைத்து சட்டங்களையும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதனை எதிா்க்கும் நோக்கில் தான் இந்த மாநாடு. அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெற செய்வது உள்ளிட்ட 22 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன” என்றாா்.

Read More : Solar Subsidy | பிரதம‌ மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்..!! இனி தபால்காரர் மூலமும் விண்ணப்பிக்கலாம்..!! எப்படி தெரியுமா..?

Chella

Next Post

Ponmudi: தண்டனை நிறுத்திவைக்கப்படுமா?… உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!… டென்ஷனில் பொன்முடி!

Mon Mar 4 , 2024
Ponmudi: சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடிக்கு எதிராக இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. திமுக ஆட்சியில் இருந்த 2006 – 2011 கால கட்டத்தில் அமைச்சராக பொறுப்பு வகித்த பொன்முடி, வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அதன்பிறகு வந்த அதிமுக ஆட்சியில் 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை […]

You May Like