fbpx

சிங்கப்பூரை ஆளும் தமிழர்..!! அதிபரானார் தர்மன் சண்முகரத்னம்..!! எத்தனை வாக்குகள் பெற்றார் தெரியுமா..?

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் செப்.13ஆம் தேதியுடன் முடிவடைகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட அனுமதி வழங்கப்பட்டது. அதனால், ஹலீமா யாகூப் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால், அவர் போட்டியின்றி அதிபராக தேர்வானார்.

இந்நிலையில், சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1ஆம் தேதியான நேற்று நடைபெற்றது. இதில் சிங்கப்பூரில் பிறந்த தமிழரான முன்னாள் அமைச்சா் தாமன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான கோக் சாங், டான் கின் லியான் ஆகிய 3 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.

இதையடுத்து, நேற்றிரவே வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று தர்மன் சண்முக ரத்னம் வெற்றி பெற்றார். இதனால், சிங்கப்பூரின் 9-வது அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் போட்டியிட்ட மற்ற இரு வேட்பாளர்களுக்கு 20 சதவீதத்திற்கு குறைவான வாக்குகளே பெற்றனர்.

Chella

Next Post

பிக்பாஸ் சீசன் 7..!! இரண்டு வீடுகளும் இவ்வளவு பிரம்மாண்டமா இருக்கே..? ஆமா, இது என்ன புதுசா இருக்கு..?

Sat Sep 2 , 2023
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், 7-வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த 7-வது சீசனில் நடிகர் அப்பாஸ், பப்லு, சந்தோஷ் பிரதாப், பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா, நடிகை அம்மு அபிராமி, நடிகை தர்ஷா குப்தா, வி.ஜே.ரக்‌ஷன், ஜாக்குலின், காக்கா முட்டையில் நடித்த விக்னேஷ், நடன அமைப்பாளர் ஸ்ரீதர், மாடல்கள் ரவிக்குமார், நிலா, நடிகை […]

You May Like