எதிர்வரும் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற புதுப்பேட்டை சந்திப்பதற்கு பாஜக தற்போது தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறது. இத்தகைய நிலையில், சென்னைக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். முதலாவதாக தென் சென்னை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் கோவிலாம்பாக்கத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 60% அமைக்கும் பணிகள் நிறைவடைந்து இருக்கின்றனர். மீதம் இருக்கக்கூடிய 40% பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் முடியுங்கள். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியை வெற்றிபெற பாடுபடுங்கள் 9வருட மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த கால தேர்தல்களில் தமிழகத்திலிருந்து இரண்டு பிரதமர்களை நாம் தவற விட்டு இருக்கிறோம். அதற்கு காரணம் திமுக தான் எதிர்வரும் காலங்களில் ஒரே ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி ஏற்போம் என அவர் தெரிவித்திருக்கிறார்.