fbpx

Tamilisai Soundararajan | அடேங்கப்பா..!! தமிழிசையின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா..? வெளியான பரபரப்பு தகவல்..!!

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், கடந்த 2019ஆம் ஆண்டு தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த 2021ஆம் ஆண்டு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு, தமிழிசைக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த போதிலும் அண்மைக்காலமாக அரசியல் ரீதியான கருத்துகளை தெரிவித்து வந்தார். இந்நிலையில், மக்களவை தேர்தலிலும் அவர் போட்டியிடப்போவதாக தகவல் வெளியானது.

இந்த தகவலை உறுதி செய்யும் வகையில், இன்று தனது ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தையும் அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி உள்ளார். 2024 மக்களவை தேர்தலில் புதுச்சேரி மக்களவை தொகுதி அல்லது தென் சென்னை, விருதுநகர், நெல்லை இவற்றில் ஏதேனும் ஒரு தொகுதியில் களமிறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழ்நாட்டின் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பட்டியலில் தமிழிசை எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது தெரியவரும். இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழிசையின் சொத்து மதிப்பு ரூ.5.4 கோடி என்றும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.5.8 கோடி என்றும் கூறப்படுகிறது.

Read More : CSK அணிக்கு பின்னடைவு..? ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட பிரபல வீரர்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

Chella

Next Post

OPS | இரட்டை இலை சின்னம் முடக்கப்படுகிறதா..? ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவால் பெரும் அதிமுகவில் பரபரப்பு..!!

Mon Mar 18 , 2024
அதிமுக சின்னம் மற்றும் கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அதிமுக இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் முறையிட்டுள்ளார். அதாவது வேட்புமனுவில், வேட்பாளர்களை அங்கீகரித்தும், சின்னத்தை அங்கீகரித்தும் கையெழுத்திட அதிகாரம் வழங்க வேண்டுமென ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். அதிகாரம் வழங்காவிடில் இரட்டை இலை சின்னத்தை முடக்கி […]

You May Like