fbpx

Tamilisai Soundararajan | கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறாரா தமிழிசை சௌந்தரராஜன்..!! அப்படினா ஆளுநர் பதவி..?

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக தற்போதைய தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளராக தற்போதைய எம்பி, விஜய் வசந்த் மீண்டும் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. அதேபோல் பாஜக சார்பில் விஜய் வசந்தின் நெருங்கிய உறவினரான தமிழிசையை களமிறக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அங்கு போட்டியிட்டு தோற்ற முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட வாய்ப்பை எதிர்பார்த்து தவமாய் தவம் கிடக்கிறார்.

இந்நிலையில், ஹைதராபாத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அளித்த பேட்டியில், ”கடவுள் கருணை இருந்தால், பாஜக மேலிடம் வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக போட்டியில் இருப்பேன். நான் ஒரு சாதாரண பாரதிய ஜனதா உறுப்பினர். எனக்கு அளிக்கப்பட்ட பணிகளை திறம்பட செய்து முடிப்பேன். எதிர்காலத்தில் பாஜ மேலிடம் என்னை எந்த பதவிக்கும் போட்டியிட நியமித்தாலும் அதனை செய்வேன்” என்று கூறினார்.

Read More : Lok Sabha | 7 கட்டங்களாக மக்களவை தேர்தல்..? தேர்தல் ஆணைய வட்டாரங்கள் பரபரப்பு தகவல்..!!

Chella

Next Post

UPSC | யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்..!! இன்றே கடைசி..!! திணறும் சர்வர்..!!

Tue Mar 5 , 2024
அரசு குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகளையும் தொடர்ந்து, முதன்மைத் தேர்வுகளை ஆண்டுதோறும் யுபிஎஸ்சி (UPSC) நடத்தி வருகிறது. இந்த இரண்டு தேர்வுகளுக்குமே எழுத விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தாண்டுக்கான முதல் நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று மார்ச் 5ஆம் தேதியான இன்று கடைசி நாள். ஆனால், யாரும் விண்ணப்பிக்க முடியாதவாறு, பல மணி நேரங்களாக சர்வர் முடங்கிக் கிடப்பதாக விண்ணப்பதாரர்கள் புகார் தெரிவிக்கின்றனர். நிறைவு செய்த விண்ணப்பங்களைப் பதிவேற்ற […]

You May Like