fbpx

இன்று தொடங்குகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்..!! வரும் 19இல் பட்ஜெட் தாக்கல்..!! மக்கள் எதிர்பார்ப்பு..!!

2024ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று தொடங்குகிறது. அரசியலைமைப்பு சட்டத்தின் படி ஒரு மாநிலத்தின் நிதியாண்டிற்கான முதல் கூட்டத்தொடர் என்பது அம்மாநில ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்தவகையில் ஆளுநர் ரவி பேரவையில் காலை 10 மணியளவில் உரையாற்றவுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வாசிக்க உள்ளார். பின்னர், அலுவல் ஆய்வு குழு கூடி எத்தனை நாட்களுக்கு அவையை நடத்தலாம் என தீர்மானிக்க உள்ளது. ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு அதன் மீதான விவாதம் 3 நாட்கள் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

வரும் 19ஆம் தேதி 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார். மேலும், 20ஆம் தேதி முன் பண மானிய கோரிக்கையும், 21ஆம் தேதி முன் பண செலவின கோரிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளன.

Chella

Next Post

இன்னும் 60 நாட்கள்தான்!… தமிழகத்தில் ஒரு புதிய சரித்திரம் பிறக்கும்!… அண்ணாமலை!

Mon Feb 12 , 2024
என் மண், என் மக்கள் யாத்திரை 200-வது தொகுதி நிறைவையொட்டி, சென்னை தங்கசாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்று வருகிறோம். மக்கள் மனதில் நமது நல்லாட்சியின் அருமை தெரிகிறது. என் மண் என் மக்கள் யாத்திரையை கடும் போராட்டத்திற்கு இடையே நடத்தி வருகிறோம். தமிழக மக்கள் மனதில் விஷத்தை விதைத்து வருகிறது திமுக. இந்த […]

You May Like