fbpx

RANJI TROPHY| தமிழ்நாடு அணி அபார வெற்றி.! 7 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதிக்கு முன்னேறிய தமிழகம்.!

தமிழ்நாடு கிரிக்கெட் அணி 7 வருடங்களுக்கு பிறகு ரஞ்சிக்கோப்பை அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்று இருக்கிறது. இன்று சௌராஷ்டிரா அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிகளுக்கு தகுதி பெற்று இருக்கிறது .

தற்போது இந்தியாவின் முதன்மையான உள்நாட்டு கிரிக்கெட தொடரான ரஞ்சித் டிராபி நடைபெற்று வருகிறது. இதன் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் மும்பை பரோடா தமிழ்நாடு சவுராஷ்டிரா ஆந்திர பிரதேசம் மத்திய பிரதேசம் கர்நாடகா மற்றும் விதர்பா ஆகிய 8 அணிகள் கால் இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றது.
.
இதில் கோயமுத்தூரில் வைத்து நடைபெற்ற மூன்றாவது கால் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிரா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் வீரர் ஹர்விக் தேசாய் 83 ரன்கள் எடுத்தார். தமிழக அணியின் பந்துவீச்சில் கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்ஸை ஆடிய தமிழக அணி மிகச் சிறப்பாக விளையாடி 338 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தமிழக அணியின் வீரர் பாபா இந்திரஜித் 80 ரன்களும் கேப்டன் சாய் கிஷோர் 60 ரன்களும் பூபதி குமார் 65 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் சௌராஷ்டிரா அணியை விட தமிழக அணி 155 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதனைத் தொடர்ந்து 155 ரன்கள் பின்தங்கிய நிலையில் களம் இறங்கிய சௌராஷ்டிரா அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 122 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தமிழக அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 7 வருடங்களுக்குப் பிறகு அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது.

கடைசியாக 2017 ஆம் ஆண்டு தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக கிரிக்கெட் அணி ரஞ்சிக் கோப்பையின் நாக் அவுட் சுற்றுகளுக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக பந்து வீசிய கேப்டன் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளும் வேகப்பந்துவீச்சாளர் சந்திப்பு வாரியர் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறந்து விளங்கிய தமிழக அணி கேப்டன் சாய் கிஷோர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

English Summary: Tamilnadu Team beats saurastra by an innings and 33 runs to qualify for the semi finals after 7 years

Next Post

பூமிக்கு அடியில் பல நூறு அடிகள் நீண்ட மர்ம குகை கோயில்.! எங்கு உள்ளது.!?

Sun Feb 25 , 2024
பொதுவாக கோயில்கள் என்றாலே மக்கள் செல்வதற்கு ஏதுவாக பொதுவான ஒரு இடத்தில் தான் அமைந்திருக்கும்.  ஆனால் இப்படியெல்லாம் இல்லாமல் பூமிக்கு அடியில் யாருக்கும் தெரியாமல் குகைக்குள் இருக்கும் மர்ம கோவிலை பற்றி கேள்வி பட்டுள்ளீர்களா? இக்கோயிலைப் பற்றி விளக்கமாக பதிவில் பார்க்கலாம்? கர்நாடகா மாநிலத்தில் மணிச்சூழல் என்ற மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த ஜர்னி நரசிம்ம குகை கோயில். இந்த குகைக்கோயில் பூமிக்கு அடியில் தோண்டப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள […]

You May Like