நாட்டிலேயே தமிழகத்தில்தான் மின் கட்டணம் மிகக் குறைவு என அமைச்சர் செந்தில் பாலாஜிவிளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மாதவரத்தில் வடக்கு மண்டல மின் பகிர்மான வட்ட சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சட்ட மன்ற உறுப்பினர்கள் மின் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது செந்தில்பாலாஜி கூறுகையில் , ’’ மின்துறை அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து அவர்கள் பகுதியில் செய்து வரும பணிகள் குறித்து விளக்க வேண்டும் என்றும் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன உள்ளது என சட்ட மன்ற உறுப்பினர்களுடன் ஆலோசிக்க வேண்டும் என்றார். தடையில்லா மின்சாரம் வழங்க மின்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டும். மக்களின் அழைப்புகளுக்கு உடனடி பதில் அளிக்க வேண்டும். என்றார். புதிய மின்கட்டணம் அமலுக்கு வந்த நாளில் இருந்து புதிய கடட்ணம் வசூல் செய்யப்படும். 60 நாட்களுக்கு ஒரு முறை எடுக்கப்படும் மின் கணக்கீட்டில் புதிய கட்டணம் அமுலுக்கு வந்த நாளில் புது கட்டணமும் முன்பாக பழைய கட்டணம் வசூலிக்கப்படும். தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட போதும் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் குறைவாகத்தான் உள்ளது. அதிமுக ஆட்சியில் மின்கட்டணம் 61 சதம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது 21 சதவீதம்தான் உயர்த்தப்பட்டுள்ளது. என்றார்