fbpx

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! மூச்சுத் திணறல் ஏற்பட்டு 10 வயது தமிழக சிறுமி பலி.!

தமிழகத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி பெற்றோருடன் சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க சென்ற போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சிறுமியின் உடல் பம்பை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சீசனை முன்னிட்டு கூட்டம் அலைமோதி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பல லட்சக்கணக்கான மக்கள் ஐயப்பனை தரிசிக்க சபரிமலை சென்று வந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த குழுவில் தனது பெற்றோருடன் ஐயப்பனை தரிசிக்க சென்று இருக்கிறார் பத்மஸ்ரீ என்ற எட்டு வயது சிறுமி.

பம்பையில் இருந்து அப்பாச்சி மேடு வழியாக பாதயாத்திரை சென்று ஐயப்பனை வழிபடுவது வளமையாக இருந்து வருகிறது. இந்தப் பாதயாத்திரைக்கு பெற்றோருடன் சென்றபோது சிறுமி பத்மஸ்ரீக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக பம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு வைத்து சிறுமி பத்மஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பம்பை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது. சிறுமியின் இறப்பு தொடர்பாக பேசிய அவரது பெற்றோர் பத்மஸ்ரீக்கு சிறுவயது முதலே மூச்சுத் திணறல் மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனைகள் இருந்து வந்ததாக தெரிவித்திருக்கின்றனர். சென்ற இடத்தில் சிறுமி உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Post

வீட்டை காலி பண்ணச் சொன்னது ஒரு குத்தமாயா.! ஹவுஸ் ஓனரை தீ வைத்துக் கொள்ள முயற்சி.! பெண் கைது.!

Sun Dec 10 , 2023
புதுச்சேரியில் வீட்டை காலி செய்யுமாறு கூறியதால் வீட்டின் உரிமையாளர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பின் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி ஆரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரன். 50 வயதான இவர் பேன்சி டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு குமுதா என்ற பெண் பூஜைக்கான […]

You May Like