fbpx

“8-ஆம் வகுப்பு பாஸ் போதும்” தமிழ்நாடு அரசின் சூப்பரான வேலை வாய்ப்பு.! ₹.15,700/- முதல் ₹.50,000/- வரை சம்பளம்.! உடனே அப்ளை பண்ணுங்க.!

செங்கல்பட்டு மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஒன்றிய பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது . செங்கல்பட்டு மாவட்டம் ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர் பணி மற்றும் எழுத்தர் பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப படிவங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எழுத்தர் பணிக்கு 1 காலியிடமும் அலுவலக உதவியாளர் பணிக்கு 1 காலியிடமும் நிரப்பப்பட உள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பிலிருந்து 5 வருடங்கள் தளர்வு வழங்கப்பட்டிருக்கிறது. பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு 2 வருடங்கள் தளர்வு வழங்கப்பட்டிருக்கிறது. அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு ஊதியமாக மாதம் Rs.15,700 முதல் Rs.50,000/- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தர் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு மாத சம்பளம் Rs.15900 முதல் Rs.50400/- வரை வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்களை தபால் மூலம் ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், திருப்போரூர். என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 08.02.2024 ஆகும். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிறகு விவரங்களை அறிய chengalpattu.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Next Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: சரயு நதிக்கரையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்த பக்தர்கள்..!

Tue Jan 16 , 2024
ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா உத்திரபிரதேசம் மாநில அயோத்தி நகரில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவிற்கு நாடெங்கிலும் இருந்து ஏராளமான சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். அரசியல்வாதிகள் சினிமா துறை பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தவிர ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பாபர் மசூதி இடிப்பின் போது கர சேவையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் ராமர் கோவில் நிலம் […]

You May Like