தமிழ்நாட்டில் நவ.3, 4, 5 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழகத்தில் இன்று குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவ.3ஆம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் நவ.4ஆம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் நவ.5ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.