fbpx

சிவன் கோவில்களில் உள்ள இந்த ஆச்சர்யம் பற்றி தெரிந்தால் அசந்து போவீர்கள்.!

நம் நாட்டில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் அதிகப்படியான கோவில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோவிலும் நிறைய அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். அந்த வகையில் சிவபெருமான் கோவில்களில் உள்ள அதிசயங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். காசியில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் பூஜை நடைபெறும் மாலை வேளையில் 108 வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்கின்றனர். தீபாரதனை காட்டுவதற்கு முன்பாக இந்த அர்ச்சனை மேற்கொள்ளப்படுகிறது. அந்த இலைகளில் ராமா என்று எழுதி இருக்கும்.

கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குளித்தலை பகுதியில் இருக்கும் கடம்பவனநாதர் சிவாலயத்தில்  இரட்டை நடராஜரை தரிசனம் செய்ய முடியும். கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் திருநல்லூர் பகுதியில் உள்ள சிவலிங்கத்தின் திருமேனி ஒரே நாளில் 5 முறை நிறம் மாறும் காரணத்தால் அந்த ஈஸ்வரனை பஞ்சவர்ணேஸ்வரர் என அழைக்கின்றனர். நெல்லையப்பர் கோவிலில் இருக்கும் கல் தூணை தட்டும் போது ச, ரி, க, ம, ப, த, நி எனும் ஏழு ஸ்வரங்களை ஒலிக்க செய்யும். எனவே இது உலக அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. திருநெல்வேலி கடையம் அருகில் இருக்கும் நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோவிலில் அமைந்துள்ள வில்வமரத்தில் லிங்க வடிவிலான காய்கள் காய்பதை காண முடியும். 

இன்றளவும் அதிகப்படியான கோவில்களில் ஒரு குறிப்பிட்ட தேதியில் சூரிய ஒளி மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழுவதை காண முடியும். அப்படி என்றால் எந்த அளவிற்கு துல்லியமாக ஆலயங்கள் கட்டப்பட்டிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். சில கோவில்களில் அன்றாடம் சூரிய ஒளி சிவ லிங்கத்தின் மேல் மாலை போல விழும். வட சென்னையில் இருக்கும் வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவிலில் மூன்று வேளையும் சூரியஒளியானது சிவலிங்கத்தின் மீது மாலை போல வந்து விழுகின்றது. இந்த கோவிலில் இருக்கும் சிவலிங்கம் ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானது .

பாண்டிச்சேரிக்கு அருகே உள்ள தமிழக பகுதியான கோட்டகுப்பத்தில் சிவலிங்கம் தலையில் வைத்த மரிக்கொழுந்து வாசனை இலைகள் தானாக துளிர்விட்டு வளர்வதை பக்தர்கள் வியந்து பார்த்து வழிபட்டு வருகின்றனர்.

Rupa

Next Post

செவ்வாய் தோஷத்தால் இன்னும் திருமணம் ஆகவில்லையா.! இந்த விரதம் இருங்க போதும்.!?

Sun Jan 21 , 2024
தற்போதுள்ள காலகட்டத்தில் பலரும் திருமணமாகாமல் பல கேள்விகளை எதிர் கொண்டு வருகின்றனர். இதில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்வது மிகவும் கடினமான ஒன்றானதாக இருந்து வருகிறது. ஜாதகத்தில் பொருத்தங்கள் இருந்தாலும் செவ்வாய் தோஷத்தினால் திருமணங்கள் நடைபெறாமல் தள்ளிப் போவது உண்டு. இதற்கு விநாயகரை வழிபடுவதன் மூலம் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறும். செவ்வாய் தோஷத்தை விரட்டும் சக்தி விநாயகருக்கு உண்டு. விநாயகர் கடவுளின் தீவிர பக்தரான […]

You May Like