fbpx

Tamilnadu Open University: இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரத்னகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை, முதுகலை மற்றும் இதரப் படிப்புகளுக்கு 2022-23-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. சேர்க்கைக்கான கல்வித்தகுதி மற்றும் கட்டணம் சம்பந்தப்பட்ட விவரங்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்தின் https://tnou.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி பயில விரும்பும் மாணவர்களின் நலன் கருதி வாரத்தின் ஏழுநாட்களிலும் (அரசு விடுமுறை நாள் உட்பட) பல்கலைக்கழக வளாகம் , விழுப்புரம், தர்மபுரி, கோயம்புத்தூர், மதுரை, ஊட்டி, திருநெல்வேலி, திருச்சி, சேலம், திருவண்ணாமலை, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய மண்டல மையங்களில் சேர்க்கை நடைபெற்று வருகின்றது.மேலும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் மாணவர் சேர்க்கைப்பிரிவு தொடர்பு எண் 044-24306664 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Also Read: #4th Wave: முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்… இல்லை என்றால் ரூ.500 அபராதம் விதிக்க வேண்டும்..! ஆட்சியர் உத்தரவு…!

Vignesh

Next Post

ரூ.19,900 ஊதியத்தில் அஞ்சல் துறையில் 8-ம் வகுப்பு முடித்த நபர்கள் வேலைவாய்ப்பு…! விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

Sat Jul 2 , 2022
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என ஏழு காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையின் கீழ் 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் விண்ணப்பதாரர்கள் […]
இந்திய அஞ்சல் துறையில் வேலை

You May Like