fbpx

தமிழக மக்களே மிக கனமழை..!! இந்த 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!! வானிலை மையம் அறிவிப்பு..!!

4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ”வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை இலங்கை-திரிகோணமலைக்கும், மட்டக்களப்பிற்கும் இடையே கரையை கடந்தது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை காலை நிலவக்கூடும். இதன் காரணமாக, இன்று தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழக மக்களே மிக கனமழை..!! இந்த 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!! வானிலை மையம் அறிவிப்பு..!!

நாளை (பிப்.3) தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் குமர், நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே இந்த 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், இராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் வரும் 4ஆம் தேதி தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

வேலைக்கு போகணுமா.? தற்கொலை செய்து கொண்ட புது மாப்பிள்ளை.! தேனியில் அதிர்ச்சி.!

Thu Feb 2 , 2023
தேனி மாவட்டத்தில் வேலைக்குச் செல்லத் தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்ததால் திருமணமான 4 மாதங்களில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூர் தெற்கு தெருவை சார்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகன் காளிதாஸ். இவருக்கு பிரபா என்பவரை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் முடித்து வைத்திருக்கிறார் ஈஸ்வரன். திருமணமான நாளிலிருந்து எந்தவித வேலைக்கும் செல்லாமல்  வீட்டிலேயே இருந்திருக்கிறார் […]

You May Like