தமிழக அஞ்சல் துறையில் இருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்காக வேலைவாய்ப்பு வெளியாகியிருக்கிறது. இந்த அறிவிப்பானது 27.1.2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தமிழக அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் அசிஸ்டன்ட் கிளை போஸ்ட் மாஸ்டர் ஆகிய பணிகளுக்காக 3167 காலி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பத்தாவது வகுப்பில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அஞ்சல் துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலையில் சேர ஆர்வம் உள்ள இளைஞர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை 16. 2. 2023க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட அனைவரும் இந்த பணிக்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என அஞ்சல் துறை தெரிவித்து இருக்கிறது. மேலும் இதற்கான மேலதிக விவரங்களை தமிழக அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்ப படிவங்களையும் அந்த இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்தப் பணிக்காக விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். கிளை போஸ்ட் மாஸ்டர் பணிக்கான மாத ஊதியம் 12,000 ரூபாயிலிருந்து 29,380 ரூபாய் வரையிலும் அசிஸ்டன்ட் கிளை போஸ்ட் மாஸ்டருக்கான சம்பளம் 10,000 ரூபாயிலிருந்து 24,470 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கான வேலை வாய்ப்புகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க முடியும். மேலும் விண்ணப்ப படிவத்துடன் சேர்த்து பொதுப் பிரிவினருக்கு 100 ரூபாய் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி எஸ்டி, பிடபிள்யுடி விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இல்லை. இந்தப் பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து பிப்ரவரி 16ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதை இணையதளத்தில் இந்தப் பணிகளுக்கான வயது தகுதியையும் கவனமாக சரிபார்த்துக் கொள்ளவும். இதற்கான இணையதள முகவரி indiapost.gov.in