fbpx

தமிழ்நாடு ரேஷன் கடைகளில்..!! இன்று முதல் வந்த புதிய மாற்றம்..!! மக்களே கண்டிப்பா யூஸ் ஆகும்..!!

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் இன்று முதல் பேடிஎம் வழியாக பணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு துறை சேவைகள் டிஜிட்டல் மயமாகி வருகிறது. பல துறைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் ரேஷனில் பொருட்களை வாங்குவதற்கு வெறும் அட்டையை வைத்துக்கொண்டு லைனில் இருந்த காலம் எல்லாம் சென்றுவிட்டது. இப்போது எளிதாக ரேஷனில் பொருட்களை வாங்க முடியும். இந்நிலையில், ரேஷனில் பொருட்களை வாங்கும் முறையை மேலும் எளிமையாக்கும் விதமாக ரேஷன் கடைகளில் இன்று முதல் பேடிஎம் வழியாக பணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

UPI செயலிகள் மூலம் பண பரிவர்த்தனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முன்பே தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. அந்த திட்டத்தின் அடிப்படையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இனி மக்கள் எளிதாக பேடிஎம் மூலம் ஸ்கேன் செய்து பணத்தை செலுத்த முடியும்.

உங்களிடம் பேடிஎம் இல்லை என்றாலும் வேறு யுபிஐ வழியாகவும் பணம் செலுத்த முடியும். இந்த பணம் நேரடியாக அரசுக்கு சென்றுவிடும். அதனால் மக்கள் பணம் அரசுக்கு சென்று சேர்வதோடு மக்களும் எளிதாக பணத்தை செலுத்த முடியும். மேலும், இதன் மூலம் சில்லறை முறைகேடுகள் பல தடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

மாணவனை அடித்து துரத்திவிட்டு கரும்பு தோட்டத்திற்குள் மாணவியை பலாத்காரம் செய்த ஓட்டுனர்..!! விழுப்புரத்தில் அதிர்ச்சி..!!

Fri Oct 13 , 2023
விழுப்புரம் மாவட்டத்தில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த 8ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி, அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் நேற்று மாலை தனியாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், “ஏன் இங்கு தனியாக நின்று பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்.. வாருங்கள் போலீஸ் ஸ்டேஷன் போகலாம்” என்று அழைத்துள்ளார். அவர் […]

You May Like