தமிழ்நாடு மாநிலம் திருநெல்வேலியில் இருந்து கேரளா இடுக்கிற்கு சுற்றுலா சென்று திரும்பிய டெம்போ ட்ராவெல்லர் வாகனம், அடிமாலி அருகே வந்த போது மலையில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்ததாக கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சுற்றுலா வாகனத்தில் 20 பேர் இருந்ததாகவும், அவர்களில் 3 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்த விபத்து மாலை 6 மணியளவில் நிகழ்ந்தது என்றும், மேலும் விபத்து நடந்ததற்கான விவரங்களை நாங்கள் இன்னும் சேகரித்து வருகிறோம்” என்று அடிமாலி காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Also Read: TVK | நடிகர் விஜய்யின் கட்சியில் இணைந்த பிரபல திரையரங்க உரிமையாளர்.!