மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான பயண செலவை ஏற்க தமிழக அரசு முன் வந்துள்ளது.
தாய்லாந்தில் ஐடி வேலை வேலை வாங்கி தருவதாக கூறி, இந்தியர்களை சர்வதேச கும்பல் ஏமாற்றி உள்ளது. அப்படி ஏமாறியவர்களை அந்த கும்பல் சட்ட விரோதமாக மியான்மருக்கு அழைத்து வந்துள்ளது. இந்த சர்வதேச மோசடியில் சிக்கி 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மியான்மரில் மியாவாடி பகுதியில் சிக்கியுள்ளனர். சிக்கிய 300 பேரில் 60 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஆயுதம் ஏந்திய ஒரு கும்பலால் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது..
கடந்த சனிக்கிழமையன்று சில தமிழர்கள் ஆபத்தில் இருப்பதாக வீடியோக்களை வெளியிட்டிருந்தனர்.. தங்களை காப்பாற்றுமாறு மத்திய மற்றும் தமிழக அரசுகளுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்த பின்னரே இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.
ஒரு நாளைக்கு 15 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதாகவும், அவர்களின் பேச்சை கேட்க மறுத்தால், எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து சித்ரவதை செய்யப்படுவதாகவும் பிணைக்கைதிகளாக இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.. இதற்கிடையில், யாங்கூனில் உள்ள இந்திய தூதரகம் மியான்மர் அரசுடன் இணைந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை 30 பேர் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களையும் மீட்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன.
இந்த சூழலில் மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை அழைத்துவர விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடி கடிதம் எழுதி இருந்தார்..
இந்நிலையில் மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு அழைத்து வருவதற்கான பயண செலவை ஏற்க தமிழக அரசு முன் வந்துள்ளது.. தாய்லாந்தில் இருந்து தமிழகம் திரும்ப விமான கட்டண செலவை ஏற்பதாக வெளியுறவு அமைச்சகத்திற்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி உள்ளது.. அவர்கள் மியான்மரில் இருந்து மீட்கப்படும் பட்சத்தில், தமிழகம் திரும்புவதற்கான செலவை அரசே ஏற்பதாக தெரிவித்துள்ளது..