fbpx

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட சூழலில் இனியும் ’தண்டோரா’ போடக்கூடாது..! தலைமைச் செயலாளர் உத்தரவு

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட சூழலில் ‘தண்டோரா’ போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார் .

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”மக்களிடம் முக்கிய செய்திகளை விரைவாகச் சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருப்பதையும், அதைச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன். அறிவியல் வளர்ந்துவிட்டது, தொழில்நுட்பம் பெருகிவிட்டது, இச்சூழலில் ‘தண்டோரா’ போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை. ஒலி பெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வலம் வரச்செய்வதன் மூலம் மூலை முடுக்குகளில் எல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்த்திட முடியும்.

’தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட சூழலில் இனியும் ’தண்டோரா’ போடக்கூடாது’..! தலைமைச் செயலாளர் உத்தரவு

எனவே, தண்டோரா போடக் கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்” என்று கூறியுள்ளார். வெள்ள அபாய எச்சரிக்கைக்காக மேட்டூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்டோரா மூலம் மக்களுக்கு தெரிவிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. எனவே, இதனை தவிர்க்கும் வகையில் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Chella

Next Post

ஓசூர், ஊராட்சி மன்ற தலைவரை கல்லால் அடித்து கொலை செய்த மர்ம கும்பல்..!?

Wed Aug 3 , 2022
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுக்கா தளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாரவேந்திரத்தின் ஊராட்சி மன்ற தலைவர் நரசிம்மமூர்த்தி (46). இவர் பி.பி பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர். நரசிம்ம மூர்த்தி தற்போது தளிப்பகுதி கமிட்டி உறுப்பினராக உள்ளார். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினராக இருந்தவர். நேற்று இரவு நரசிம்ம மூர்த்தி தளி பகுதியில் உள்ள கடையில், பொருட்கள் வாங்கிக் கொண்டு தனது பைக்கில் ஊருக்கு […]

You May Like