fbpx

ஓடிடியில் வெளியாகும் தங்கலான், வாழை..!! எப்போது எந்த தளத்தில் தெரியுமா..?

இந்தாண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தங்கலான், வாழை உள்ளிட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ஹிட் ஆன நிலையில், படம் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், தற்போது முக்கியமான படங்கள் ஓடிடியில் வெளியாகும் தேதி பற்றிய தகவலை இதில் பார்ப்போம்.

வாழை

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியது. இப்படம் வரும் 17ஆம் தேதி ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தங்கலான்

100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ள தங்கலான் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

நண்பன் ஒருவன் வந்த பிறகு

இளைஞர்கள் கொண்டாடி தீர்த்த படங்களில் நண்பன் ஒருவன் வந்த பிறகு. இந்த படம் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

டிமாண்டி காலனி 2

முதல் பாகத்தை போல 2-வது பாகத்திலும் நம்மளை கதிகலங்க வைத்த டிமாண்டி காலனி 2 திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி ஜி 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரகு தாத்தா

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின் ஓடிடி உரிமையை ZEE5 நிறுவனம் தான் வாங்கியுள்ளது. இந்த படத்தினை செப்டம்பர் 13ஆம் தேதி வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

Read More : ரூ.15 லட்சம் வரை கடன்..!! இவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க..!! தமிழ்நாடு அரசு அசத்தல் அறிவிப்பு..!!

English Summary

With movies like Tangalan, Vazhai hitting the theaters, fans are waiting to know when and in which OTD the movie will be released.

Chella

Next Post

பருவ வயதுப்பெண்களின் ரத்தசோகையை சித்தா மருந்து கலவை குறைக்கிறது!. ஆய்வில் நிரூபணம்!.

Wed Sep 11 , 2024
Study finds combination of ‘Siddha’ drugs can reduce Anemia in adolescent girls

You May Like