fbpx

டேங்கர் லாரி கவிழ்ந்ததால் லீக்கான கேஸ்..!! பள்ளிகளுக்கு விடுமுறை..!! கோவையில் பரபரப்பு..!!

கோவையில் எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், சம்பவ இடத்திற்கு அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் அவினாசி மேம்பாலம் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் 20 மெட்ரிக் டன் எடை கொண்ட எரிவாயு கொண்டு சென்ற டேங்கர் லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், லாரியின் டேங்கர் பகுதி சேதம் அடைந்ததால் உள்ளே இருந்த எரிவாயு கசிந்தது. இதையடுத்து, உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மேம்பாலம் வழியாக வரும் வாகனங்களை மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்தனர்.

மேலும், அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு லாரியில் இருந்து கசிந்த எரிவாயு மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்த மீட்பு பணிகளால், தற்போது கசிவு தடுக்கப்பட்டுள்ளது. ரசாயன மூலப்பொருட்களை கொண்டு எரிவாயு கசிவு கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

லாரியை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதற்காக திருச்சியில் இருந்து வாகனம் வரவழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. லாரி விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ள மக்களை அப்புறப்படுத்தும் பணியும் நடைபெற்றது. எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், சம்பவ இடத்திற்கு அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் பனிப்பொழிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More : ”எல்லாம் பண்ணிட்டு கல்யாணம் மட்டும் கசக்குதா”..? பேசிக் கொண்டிருக்கும்போதே கத்தியால் சரமாரியாக குத்திய காதலி..!!

English Summary

A tanker truck carrying 20 metric tons of gas suddenly overturned and met with an accident near the Avinashi flyover at around 3 am this morning.

Chella

Next Post

"நான் தான் ஹீரோயின்னு சொல்லி ஏமாத்திட்டாங்க" புலம்பி தள்ளிய குஷ்பூ..

Fri Jan 3 , 2025
famous indian actress kushboo worries that she was fooled by the role as heroine in annatha movie

You May Like