fbpx

டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணம் கொட்டப் போகுது..!! தீபாவளி போனஸ் அறிவித்தது தமிழ்நாடு அரசு..!!

தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொதுமக்கள் அனைவரும் பட்டாசு வாங்குவது, புத்தாடைகள் எடுப்பது என தற்போதே ஆயத்தமாகி வருகின்றனர். இதற்கிடையே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 20,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு போனஸ் அறிவித்துள்ளது. அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.

அதன்படி, டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகபட்சமாக ஒரு டாஸ்மாக் ஊழியருக்கு ரூ.16,800 வரை போனஸ் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Read More : மழைக்காலம் தொடங்கியாச்சு..!! அனைவரது வீடுகளிலும் இதை கண்டிப்பா பொருத்துங்க..!! மின்சார வாரியம் அறிவுறுத்தல்..!!

English Summary

Bonuses have been announced for Tasmac store employees across Tamil Nadu.

Chella

Next Post

பாஜகவில் இருந்து விலகிய நடிகை கெளதமிக்கு அதிமுக-வில் முக்கிய பொறுப்பு..!!

Mon Oct 21 , 2024
Actress Gauthami, who left the BJP, has been given an important role in the AIADMK, it has been reported.

You May Like