fbpx

இன்று முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை!! – மதுபிரியர்கள் ஷாக்

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை 13ஆம் தேதி நடைபெறுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தன.

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் ஜூலை 8,9,10 மற்றும் ஜூலை 13 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். இந்த நாட்களில் அனைத்து டாஸ்மாக் கடைகள், தனியார் மதுபானக் கூடங்கள், சொகுசு ஹோட்டல்களிலும் மதுபான சப்ளை உள்ளிட்ட எதுவும் இருக்க கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Read more | அமெரிக்கா செல்லும் ஸ்டாலின்.. துணை முதல்வராகும் உதயநிதி.. அமைச்சரவையிலும் பெரிய மாற்றம்? பின்னணி என்ன?

English Summary

Collector Palani has ordered the closure of Tasmac shops on July 8, 9, 10 and July 13 in Villupuram district ahead of the Vikravandi by-election.

Next Post

தமிழ்நாட்டில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!! இந்த 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!!

Mon Jul 8 , 2024
Chennai Meteorological Department has informed that it will rain in 6 districts in Tamil Nadu today.

You May Like