fbpx

டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து 3 நாட்களுக்கு இயங்காது..!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!! மதுப்பிரியர்கள் ஷாக்..!!

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விநாயகரும், சந்திரசேகரரும் திருக்கோவிலை வலம் வந்து ராஜகோபுரம் அருகே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் 4 குடைகள் கூடிய தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரரும், மூசிக வாகனத்தில் விநாயகரும் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் மாடவீதியில் வலம் வந்த விநாயகர் மற்றும் சந்திரசேகரை கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திரு கார்த்திகை தீபம் வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, திருவண்ணாமலை மற்றும் வேங்கிக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வரும் 25, 26, 27 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Chella

Next Post

அதிகார பதவி!… செல்வத்தில் திகைக்க போகும் இந்த 3 ராசிகாரர்கள்!… 30 ஆண்டுகளுக்கு பிறகு உச்சம்பெற்ற சனி பகவான்!

Mon Nov 20 , 2023
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான், செயல்களின் பலன்களை அளிப்பவராகவும், நீதியின் கடவுளாகவும் கருதப்படுகிறது. அந்த வகையில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி அன்று, சனி 30 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் அசல் முக்கோண அடையாள ராசியான கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து நேராக பயணிக்கத் தொடங்கினார். இதனிடையே சனி வரும் 2025 ஆம் ஆண்டு வரை கும்ப ராசியில் தான் இருக்கப் போகிறார், இது 2024 ஆம் […]

You May Like