fbpx

ஓவன் வேண்டாம்.! கிறிஸ்துமஸுக்கு வீட்டுலேயே கேக் செஞ்சு சாப்பிடலாம்.! இதோ அட்டகாசமான ரெஸிபி.!

கிறிஸ்துமஸ் பண்டிகை அனைத்து கிறிஸ்தவர்களாலும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இந்தப் பண்டிகைக்கு கேக் மற்றும் இனிப்புகளை செய்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்குவது கிறிஸ்தவர்களின் பழக்கம். சுவையான கிறிஸ்துமஸ் கேக் வீட்டில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இந்த கேக் செய்வதற்கு மைதா மாவு 300 கிராம், பேக்கிங் பவுடர் 3 டீஸ்பூன், சோடா உப்பு 1/2 டீஸ்பூன், வெண்ணெய் 200 கிராம், பொடித்த சர்க்கரை 250 கிராம், முந்திரிப் பருப்பு 50 கிராம், உலர் திராட்சை 50 கிராம், 3 முட்டை, செர்ரி 50 கிராம், பிஸ்தா பருப்பு 50 கிராம், கொக்கோ 1 டீஸ்பூன், கேக் பவுடர் 1 டீஸ்பூன், வெண்ணிலா எசன்ஸ் தேவையான அளவு மற்றும் பால் 100 மில்லி லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முதலில் மைதா மாவு, கேக் பவுடர், சோடா உப்பு ஆகியவற்றை மூன்று முறை சல்லடையில் வைத்து சலிக்கவும். முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும். பொடித்த சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். இவற்றுடன் கரைத்த முட்டையை நன்றாக நுரை வரும் வரை அடித்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் மைதா மாவோடு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கலக்கவும். இவற்றுடன் வெண்ணிலா எசன்ஸ், கொக்கோ பவுடர், செர்ரி மற்றும் முந்திரி பிஸ்தா ஆகியவற்றையும் கலக்கவும்.

இவை அனைத்தையும் ஒன்றாக கலந்த பின்னர் கேக் ட்ரேயில் இவற்றை பரப்பி ஓவனில் வைத்து எடுக்கலாம். ஓவனில்லை என்றால் குக்கரில் உப்பு அல்லது மண்ணை பரப்பி அதன் மேல் சற்று உயரமாக வைக்க ஒரு ஸ்டாண்ட் கலந்து வைத்த கலவையை டிபன் பாக்ஸில் மூடி வைத்து 45 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான கிறிஸ்துமஸ் கேக் ரெடி. உங்களுக்கு பிடித்த வகையில் அலங்காரம் செய்து கேக் பரிமாறலாம்.

Next Post

மிக் ஜாம் போயாச்சு.! அடுத்து வர புயலுக்கும் பேரு வச்சாச்சு.! என்ன பேரு தெரியுமா.?

Wed Dec 6 , 2023
கடந்த சில தினங்களாக கனமழை மற்றும் புயலால் சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியது. 24 மணி நேரத்திற்கும் அதிகமாக தொடர்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது வரை சென்னை மற்றும் அதனை சுற்றி இருக்கும் மாவட்டங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்து வர இருக்கும் புயல்களுக்கான பெயரை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கிறது. […]

You May Like