டாடா மோட்டார்ஸ் வாகனங்களின் விலையை உயர்த்தியதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் சந்தைகளில் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. மாறுபாடு மற்றும் மாடலைப் பொறுத்து இந்த விலை உயர்வானது 0.9% ஆக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
வாகனங்களை தயாரிப்பதற்கான உதவிப் பொருட்களின் செலவினங்கள் அதிகரித்துள்ளது, ஆனால் ஒட்டுமொத்த உள்ளீட்டுச் செலவுகளின் நிலையான உயர்வு, இந்த குறைந்தபட்ச விலை உயர்வு கொண்டு வரும் சூழல் உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் நாடு முழுவதும் டியாகோ, பஞ்ச், நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி போன்ற பல பயணிகள் வாகனங்களை விற்பனை செய்கிறது.
அக்டோபர் மாதத்தில் உள்நாட்டு சந்தையில் பயணிகள் வாகனங்களின் விற்பனையை டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. உள்நாட்டு சந்தையில் மின்சார வாகனங்கள் உட்பட அதன் PV விற்பனை கடந்த ஆண்டு இதே மாதத்தில் 34,155 யூனிட்களுடன் ஒப்பிடும்போது 33% அதிகரித்து 45,423 யூனிட்களாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.