Tata Steel Chess: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான குகேஷை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி டை பிரேக்கரில் வெற்றி பெற்றார்.
நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரின் 87வது சீசன் நடக்கிறது. தன் ‘மாஸ்டர்ஸ்’ பிரிவு 12வது சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, செர்பியாவின் அலெக்சி சரணா மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 29வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இது, பிரக்ஞானந்தாவின் ‘ஹாட்ரிக்’ வெற்றியானது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய அர்ஜுன், 46வது நகர்த்தலில் வென்றார். ‘நடப்பு உலக சாம்பியன்’ இந்தியாவின் குகேஷ், நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரஸ்ட் மோதிய மற்றொரு 12வது சுற்றுப் போட்டி 50வது நகர்த்தலில் ‘டிரா’ ஆனது. மற்ற இந்திய வீரர்கள் மென்டோன்கா, ஹரிகிருஷ்ணா தங்களது போட்டியை ‘டிரா’ செய்தனர்.
12 சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ் தலா 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் (7.5 புள்ளி) 3வது இடத்தில் உள்ளார். ஹரிகிருஷ்ணா (6.0 புள்ளி), அர்ஜுன் (4.5), மென்டோன்கா (4.5) முறையே 8, 12, 13வது இடத்தில் உள்ளனர். ஜேர்மனியின் வின்சென்ட் கீமருக்கு எதிராக பிரக்ஞானந்தாவும் ஆச்சரியமான பின்னடைவை சந்தித்தார், அதே நேரத்தில் குகேஷ் சக நாட்டு வீரர் அர்ஜுன் எரிகைசியிடம் தோற்றார். இருப்பினும், இருவரும் தலா 5.5 புள்ளிகளுடன் தங்கள் கூட்டு முன்னணி நிலையைத் தக்க வைத்துக் கொண்டனர்.
இதையடுத்து, வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதி மற்றும் 13-வது மற்றும் இறுதி சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. இதில், போட்டியின் கடைசி சுற்று வரை ஆட்டமிழக்காமல் இருந்த குகேஷ், கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசியிடம் 31 நகர்த்தல்களில் தோல்வியடைந்தார். பிராக், ரவுண்ட் 13 இல் கிராண்ட்மாஸ்டர் வின்சென்ட் கீமரிடம் தோற்றார். இதனால் நடைபெற்ற டைபிரேக்கரில் உலக சாம்பியனான குகேஷை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு விஜ்க் ஆன் ஜீயில் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். உலகத் தரவரிசையில் 14வது இடத்தில் இருந்து போட்டியைத் தொடங்கிய பிரக்ஞானந்தா, நேரடி மதிப்பீடுகளில் உலகின் 7வது இடத்திற்கு முன்னேறினார்.