fbpx

மீன்பிடிப்பதற்காக சென்று டைலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு…..! விழுப்புரம் அருகே சோகம்…..!

விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்துள்ள செங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் 52 டைலர் வேலை பார்த்து வருகிறார் இவர் காலை 9 மணி அளவில் கொளுப்பூர் ஆற்றங்கரைக்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் வெகு நேரம் ஆன பின்னரும் இவர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஆற்றங்கரைக்கு சென்று பார்த்தனர்.

அப்போது அங்கே முருகன் மயங்கி நிலையில், இறந்து கிடந்தார். இது தொடர்பாக அவருடைய மகன் விநாயகமூர்த்தி கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.

அதன் பேரில் காவல்துறையினர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

செந்தில் பாலாஜிக்கு தொடர்புள்ள பகுதிகளில்…..! 2வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு…..!

Sat May 27 , 2023
தமிழக மின் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவை பொருத்தவரையில் அமைச்சராக மட்டுமல்லாமல் மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். மேலும் கரூர் மாவட்டத்தில் அவருக்கு அதிக செல்வாக்கு இருப்பதால் திமுக அவரை எப்போதும் தனி கவனத்துடன் கவனித்து வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவர் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அதாவது 2011 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக […]

You May Like