fbpx

டி.சி.எஸ். ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற மருத்துவ சான்று கட்டாயம்…

கொரோனா முடிவுக்குப் பின்னர் தற்போது அனைத்து மென்பொறியாளர்களும் அலுவலகத்திற்கு சென்று பணியாற்றி வரும் நிலையில் வீட்டிலிருந்து பணியாற்ற மருத்துவச் சான்று கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டி.சி.எஸ். நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மருத்துவக் காரணங்கள் அல்லது வேறு சில காரணங்களால் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற வேண்டும் என விருப்பம் தெரிவிக்கின்றனர். இதனால் அலுவலகத்தில் இருந்து மருத்துவக் குழு சம்மந்தப்பட்ட பணியாளரிடம் சோதனை நடத்துவார்கள். அவர்கள் அளிக்கும் மருத்துவ சான்றிதழை ஊழியர்கள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதை சரிபார்த்த பின்னர் வீட்டில் இருந்த படியே பணியாற்றலாம் என டிசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்நிறுவனம் ஊழியர்களின் பதிவேட்டை உன்னிப்பாக கவனித்து வருகின்றது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வரவில்லை என்றால் அவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.

வார நாட்களில் அலுவலகங்களுக்கு வந்து பணியாற்ற ஊக்குவித்து வருகின்றோம். இதன் படி தற்போது ஊழியர்கள் அலுவலகத்தில் வந்து பணியாற்றுகின்றனர். கடந்த செப்டம்பர் 22ம் தேதி டிசிஎஸ். தங்கள் மேலாளர்கள் உருவாக்கிய பட்டியலின்படி அலுவலக்களுக்கு கட்டாயம் வர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

இது குறித்து டி.சி.எஸ். நிறுவனத்தின் ஹெச்.ஆர். தொழிலாளர்களின் 3ல் ஒரு பங்குபேர் அலுவலகத்திற்கு வரத் தொடங்கி உள்ளனர். அனைத்து ஊழியர்களும் டிசம்பர் முதல் தினமும் பணிக்கு அலுவலகத்திற்கு வர வேண்டும். இதை ஊழியர்கள் பின்பற்ற வேண்டும். 70 சதவீதம் ஊழியர்கள் 100 சதவீதமாக மாறில் ஊதியம் பெறுவார்கள். 30 சதவீதம் பேர் தங்கள் செயல்பாட்டின் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள். என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ம் தேதி முடிவடைந்த காலாண்டிற்கான நிறுவனத்தின் நிதி நிலையை அறிவித்தபின்னர் இவை அனைத்தும் கட்டாயம் பின்பற்றப்படும் என்றார்.

Next Post

வால்பாறை முன்னாள் MLA கோவை தங்கம் காலமானார்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

Wed Oct 12 , 2022
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கோவை தங்கம், உடல் நலக்குறைவு காரணமாக, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.  கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை வால்பாறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கோவை தங்கம். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி கடந்த 2021ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்தார். பின்னர், அதே ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆறுமுகத்திடம் வெற்றி […]
வால்பாறை முன்னாள் MLA கோவை தங்கம் காலமானார்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

You May Like