ஐடி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பணிநீக்கம் ஒவ்வொரு கால கட்டத்தில், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உலக அளவில் லட்சக்கணக்கான ஊழியர்களுடன் இயங்கி வரும் பல நிறுவனங்களும் கடந்த சில மாதங்களில் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், டிசிஎஸ், விப்ரோ என்று அனைத்து நிறுவனங்களுமே அடங்கும்.
இது ஒருபுறம் இருக்க, மற்றொரு பக்கத்தில் ஃபிரெஷ்ஷர்களை வேலைக்கு எடுப்பதும் குறைந்திருக்கிறது. ஏற்கனவே கேம்பஸ் தேர்வில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட ஃபிரெஷ்ஷர் மாணவர்களுக்கு வேலைக்கான ஆர்டர் வழங்கப்படாமல், பணியில் சேராமல் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஐடி நிறுவனங்கள் ஏற்கனவே கேம்பஸ்ஸில் மாணவர்களை தேர்வு செய்யாது என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்ட நிலையில், டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை ஆப்பரேட்டிங் அதிகாரியான என்.கணபதி சுப்ரமணியம் நடப்பு நிதியாண்டில் கணிசமான எண்ணிக்கையில் கேம்பஸ் தேர்வு மூலம் மாணவர்களை, வேலைக்கு தேர்வு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.
அதாவது கேம்பஸ் தேர்வு மூலம் டிசிஎஸ் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 40,000 ஃபிரெஷ்ஷர்களுக்கு வேலை காத்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டுமே டிசிஎஸ் நிறுவனம் 35,000 – 40,000 புதிய ஊழியர்களை வேலைக்கு எடுக்கும். இந்தாண்டு புதிய ஊழியர்கள் ஆக ஃபிரெஷ்ஷர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதுமட்டுமில்லாமல், சுப்பிரமணியம் புதிய வேலைகளை ஊழியர்களை வேலைக்கு எடுப்பதால் ஏற்கனவே இருக்கும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அர்த்தம் கிடையாது என்பதையும் விளக்கியுள்ளார்.
டிசிஎஸ் நிறுவனத்தில் 6,00,000 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் 10 சதவீத ஊழியர்கள், அதாவது 60,000 நபர்கள் கடந்த ஆண்டு போதிய அளவு பயிற்சி பெற்று தேவையான திறன்கள் உடன் பணியைத் தொடங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.