fbpx

ஆசிரியர் தகுதித் தேர்வு..!! சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி..? தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு..!!

சான்றிதழ் பதிவிறக்கம் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 1.53 லட்சம் பேர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், 21,543 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு..!! சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி..? தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு..!!

அதன்படி, ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது சான்றிதழை trb.tn.nic.in என்ற இணையதளத்தில் மூன்று மாதங்கள் வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியில் சேர அரசு நடத்தும் போட்டி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

Chella

Next Post

கரிப் கல்யாண் யோஜனா...! இலவச ரேஷன் பொருட்கள் நீட்டிப்பு...! மத்திய அமைச்சர் தகவல்...!

Fri Dec 23 , 2022
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் ஷோபா கரன்லாஜே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா எனப்படும் பிரதமரின் ஏழைகள் நலவாழ்வு திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதை நீட்டிப்பது குறித்து பிரதமர் அறிவிப்பார். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்கு இந்தத் திட்டத்தில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்குவது இம்மாதத்துடன் நிறைவடைய இருக்கிறது. இந்நிலையில், மத்திய அரசின் கையிருப்பில் போதிய […]

You May Like