fbpx

பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிக்கிக்கொண்ட ஆசிரியர்..!! கூட்டமாக வந்த மாணவிகள்..!! பதறிய போலீஸ் அதிகாரி..!!

நெல்லை மாநகராட்சி பகுதியில் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி நெல்லை மாநகர காவல்துறை சார்பில், அப்பள்ளியில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

அப்போது நிகழ்ச்சி முடிவில் தனியாக வந்த பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் அங்குள்ள காவல்துறை உயர் அதிகாரியிடம் அப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாகவும், அடிக்கடி தொல்லை தருவதாகவும் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், பள்ளியில் பணியாற்றக்கூடிய ஆசிரியர் ஜோசப் (59) என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இறுதியில் மாணவிகள் அளித்த புகார் உண்மை என்று தெரியவந்ததை அடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். ஆசிரியரே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

ஷாக்கிங் நியூஸ்..!! 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு..!! நோயாளிகள் பாதிக்கும் அபாயம்..!!

Fri Nov 10 , 2023
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், மருத்துவமனை மற்றும் நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. நிதி நெருக்கடியை காரணம் காட்டி ஆம்புலன்ஸ் சேவையை அரசு குறைக்க முயல்வதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதனை கண்டித்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் ஜனவரி 8ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் […]

You May Like